இல்லையெனில், ரேஷன் பொருளே கொடுக்க வேண்டாம் என்ற நிலையாவது எடுக்கட்டும்

'இல்லையெனில், ரேஷன் பொருளே கொடுக்க வேண்டாம் என்ற நிலையாவது எடுக்கட்டும்' என, பொருள் வாங்க வரும் மக்கள், பொங்கி எழுகின்றனர். தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயர்ந்தன. இதனால், வேலையில்லாமல் முடங்கியுள்ள ஏழை மக்கள், அதிக விலை கொடுத்து, மளிகை பொருட்களை வாங்க சிரமப்பட்டனர். இதையடுத்து, ரேஷன் கடைகளில், குறிப்பிட்ட எடையில், மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், புளி, மிளகாய் துாள் உள்ளிட்ட, 19 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, தலா, 500 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்தது.